5. நேர்காணல்கள்

ஜெயராம் 1981 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி சென்னையில்  கீதா மற்றும் வெங்கடேசன் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு ஒரு மூத்த சகோதரனும் உள்ளார். வில்லிவாக்கம் செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் பள்ளிக் கல்வியும், சென்னை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் இளங்கலை எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிப்பும் படித்து முடித்துவிட்டு அமெரிக்காவில் ஓஹையோ நகரில் உள்ள சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் அதே பிரிவில் MS முடித்துள்ளார். இவருடைய மனைவியின் பெயர் அனுஷா. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சுமார் கடந்த 10 ஆண்டுகளாக சென்னையில் அறப்போர் இயக்கம் என்னும் ஒரு அமைப்பைத் தொடங்கி ஊழலுக்கு எதிராக தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டு இருக்கிறார். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்களை ஆதாரத்துடன் வெளியில் கொண்டு வருகிறார். அதன் விளைவாக பல்வேறு வழக்குகளையும், சிறை அனுபவங்களையும் எதிர்கொண்டு உள்ளார். ஒரு நேர்மையான சமூகம் அமைவதற்கு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு இருக்கும் இவரின் செயல்பாடுகள், வழக்குகள், பாதித்த ஆளுமை என்று மிக விரிவாக இந்த பேட்டியில் சொல்லியுள்ளார். முனை இளைஞர் இயக்கம் நடத்தவிருக்கும் “நேர் வழி விருது விழா 2024” இல் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

திரு. ஜெயராம் வெங்கடேசன், அறப்போர் இயக்கம் 

1.     ஒரு அரசு அலுவலகத்தில் ஒருவர் நேர்மையாக இருந்து ஓய்வு பெறுகிறார்இன்னொருவர் நேர்மையாக இருப்பது மட்டுமல்லாது ஊழல் வாதிகளை காண்பித்துக் கொடுக்கிறார். இருவருக்கும் உள்ள வேறுபாடு என்ன யார் உயர்ந்தவர் ?

ஒருவர் நேர்மையாக இருக்கிறார் ஆனால் மற்றவர் ஊழல் செய்வது பற்றி தனக்கு கவலை இல்லை, என்னால் இந்த நாட்டை திருத்த முடியாது என்று சொன்னார் என்றால் அவருடைய பார்வை ஒரு குறுகிய பார்வையாக உள்ளது என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அவர் ஒரு அரசுத்  துறையில் வேலை பார்க்கிறார், மக்களுக்காக சேவை செய்கிறார் என்னும் போது அவர் மட்டும் நேர்மையாக இல்லாமல் அந்த துறையே நேர்மையாக செயல்பட்டால் மட்டும் தான் அதன் சேவை மக்களை சென்றடையும் என்னும் புரிதலோடு செயல்படுபவர்கள் மட்டும் தான் அந்த துறையை மாற்றக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அந்த விதத்தில் பார்க்கும் போது தான் பணிபுரியும் துறையில் நடக்கிற ஊழல்களை கேள்வி எழுப்புகிற, தட்டிக் கேட்கிற ஒருவர் தான் நிச்சயமாக  உயர்ந்தவராக இருக்க முடியும்.

2.     கல்லூரிக் காலத்தில் ஊழலுக்கு எதிராக பேசும் மாணவர் எவ்வாறு லஞ்சம் வாங்க துவங்குகிறார் ?

மேலும் படிக்க : https://munaiassociation.blogspot.com/2024/12/blog-post.html

விருதாளர் சுபா நேர்காணல்:

சுபா  2017 ஆம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலராக பதிவி ஏற்று எட்டு வருடங்களில் இது வரை நான்கு கிராமங்களில் பணி செய்து உள்ளார். தற்போது அத்தானி அருகில் அம்மாபாளையம் என்னும் கிராமத்தில் பணி செய்கிறார். கோபி அருகில் இவருடைய வீடு உள்ளது. இவர் வீட்டில் இவரும், இவருடைய கணவர் இருவரும் வருமானம் ஈட்டக் கூடிய நபராக உள்ளனர். இவருடன் இவரின் பாட்டி, அம்மா, அக்கா ஆகியோர் உள்ளனர். அக்காவும் வேலைக்கு செல்கிறார். கணவர் கடல் சார்ந்த பணியில் இருப்பதால் பெரும்பாலும் வெளியூரில் தான் இருப்பார். இவர் பாரதிதாசன் கல்லூரியில் இளங்கலை படிப்பு முடித்துள்ளார். பணியில் சேர்ந்து எட்டு வருடங்களில் ஒரு முறை கூட லஞ்சம் பெறாமல் நேர்மையாக பணி செய்து வருகிறார். அவர் எந்த தருணத்தில் நேர்மையாக இருப்பது என்று முடிவு எடுத்தார், அதில் அவர் கண்ட சிக்கல்கள் என்ன, அவருடைய முன்னுதாரணம் யார் யார் என்பது குறித்து இந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

அம்மாபாளையம் VAO, சுபா அவர்களை சந்தித்த போது 

1.    1. நேர்மையாக இருப்பவர்களின் பெரும் அகத் தடை என்பது என்ன?அகத்தடை என்று எதுவும் இல்லை. நாம் ஒரு முடிவு எடுத்த பின் அதில் இருந்து பிறழாமல் இருக்க முடியும் என்று தான் நம்புகிறேன்.

2.    2. நேர்மையாக இருப்பவர்களின் பெரும் புறத் தடை என்பது என்ன? 

மேலும் படிக்க: https://munaiassociation.blogspot.com/2024/12/blog-post_5.html

.

விருதாளர் ஸ்ரீதரன் நேர்காணல்:

ஸ்ரீதரன் 2017 ஆம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலராக பதிவி ஏற்று எட்டு வருடங்களில் இது வரை மூன்று கிராமங்களில் பணி செய்து உள்ளார். இந்த எட்டு ஆண்டுகளுமே லஞ்சம் வாங்கமால் நேர்மையாக பணி செய்து உள்ளார். தற்போது அத்தானி அருகில் சவண்டப்பூர் என்னும் கிராமத்தில் பணி செய்கிறார். இவர் பாரதிதாசன் கல்லூரியில் இளங்கலை படிப்பு முடித்துள்ளார். இப்போது கவந்தப்பாடி அருகில் உள்ள இவருடைய வீட்டில் இவர், இவருடைய மனைவி, தாய், தங்கை ஆகியோர் ஒன்றாக உள்ளனர்.  இவர் வீட்டில் இவரும், இவருடைய மனைவி இருவரும் வருமானம் ஈட்டுகின்றனர். இவர் நேர்மையாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்த தருணம், அதில் அவர் கண்ட சிக்கல்கள், அதன் மூலம் அவருக்கு கிடைத்த மதிப்பு ஆகியவற்றை குறித்து இந்த நேர்காணலில் கூறுகிறார்.

சவண்டப்பூர் VAO ஸ்ரீதரன் அவர்களை நேரில் சந்தித்து அவருக்கான விருதை தெரிவித்தபோது 

      1. நேர்மையாக இருப்பவர்களின் பெரும் அகத் தடை என்பது என்ன?

நம் வருமானத்திற்கு மேல் ஆசைப்பட்டு தேவையற்ற எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொண்டால் தான் அகத்தடைக்கள் உருவாகும். நம்முடையசம்பளத்திற்குள் நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, தேவைகளை சுருக்கிக் கொள்ளும் பட்சத்தில் பெரிய அகத்தடைகள் ஒன்றும் இல்லை.

      2. நேர்மையாக இருப்பவர்களின் பெரும் புறத் தடை என்பது என்ன?

மேலும் படிக்க: https://munaiassociation.blogspot.com/2024/12/blog-post_7.html

Tags:

No responses yet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *