அம்மாபாளையம் திட்டம்
ஒரு கிராமத்தை தேர்வு செய்து காந்திய விழுமியங்களை நிலவச் செய்து ஒரு தன்னிறைவு மிக்க முன் மாதிரியான கிராமமாக அதை உருவாக்குதல் என்பது நோக்கம். அதன் படி ஈரோடு மாவட்டம் கோபி தாலுக்காவில் பவானி ஆற்றில் ஒரு தீவு போல அமைந்து உள்ள சிறிய கிராமமான அம்மாபாளையத்தை தேர்வு செய்தோம். இங்கு சுமார் 400 வீடுகள் உள்ளது, மக்கட்தொகை சுமார் 1000. இங்கு துவக்கப் பள்ளியும் ஒரு அங்கன்வாடி மையமும் உள்ளது. விவசாயம் பிரதான தொழில். ஆற்றின் கரையில் அமைந்துள்ளதால் இது ஒரு அழகிய, சுற்றுலாவிற்கு வாய்ப்புள்ள கிராமம். இங்கு மாணவிகள் வீடு எடுத்து தங்கி தினசரி செயல்படுவார்கள். பிற மாணவர்களும் இந்த கிராமத்திற்கு அடிக்கடி வந்து பணியாற்றுவார்கள். இந்த திட்டத்தில் குறைந்தது 15 மாணவர்கள் பங்கேற்பார்கள்.
முனை அமைப்பிற்கு 6 மாதங்களுக்கு மூன்று கட்ட பணித் திட்டம் உள்ளது. இங்கு வழக்கமான கூட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவை நடத்தப்படும். பெண்களின் பங்களிப்பை மாணவிகள் உறுதி செய்வார்கள். முனை அமைப்பு பொதுமக்களின் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் நேர்மையை வலியுறுத்தும். உள்ளூர் இளைஞர்களை ஒருங்கிணைக்க மாற்றுக் கல்வித் திட்டங்கள் நடத்தப்படும்.
தற்போதைய நிலை: 26.10.24 அன்று பணி துவங்கியது. வரவேற்பு நன்றாக இருந்தது. கிராம மக்கள் மாணவிகள் தங்குவதற்கு இலவச வீட்டை வழங்கினர். 12.12.24 அன்று நேர்வழி விருது விழா நடத்தி உள்ளோம். அன்றில் இருந்து ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஒரு நாள் நேர்மை என்கிற திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளோம். இது அமலில் உள்ளது. செப்டம்பர் 2025 வரை தொடர் பணிகள் செய்து வருகிறோம்.






- மக்கள் தொகை, வாக்காளர்கள், மாணவர்கள் போன்றவர்களின் தரவுகளை நாங்கள் சேகரித்துள்ளோம்.
- குப்பை கொட்டும் பகுதி அடையாளம் காணப்பட்டது
- மக்களுடன் இணக்கம் ஆவதற்கு Not One Less என்னும் சீன திரைப்படம் திரையிட்டு உள்ளோம்
- நேர்மையான ஊராட்சி என்னும் தலைப்பில் கோலப்போட்டி நடத்தி பரிசு கொடுத்து உள்ளோம்
- மக்கும் குப்பை மக்காத குப்பை கொட்டுவதற்கு அனைத்து வீடுகளிலும் இரண்டு குப்பை தொட்டிகள் அளித்து உள்ளோம். சாலையோரம் கொட்டப்பட்டு உள்ள குப்பைகளை அகற்றி உள்ளோம்.
- பள்ளி மாணவர்களுக்கு தினமும் மாலை ஒரு மணிநேரம் தனிவகுப்பு எடுக்கப்படுகிறது.
தனிவகுப்பு
இதற்கு ஹைதராபாத்தை சேர்ந்த GBR Freight forwarders நிதி நல்குகிறது.

No responses yet