5. வெள்ளாளபாளையம் திட்டம்

காந்திய வழிமுறைகளில் அடிப்படையான ஒன்று படிப்படியான முன்னேற்றம். சிறிய இடத்தில் தொடங்கி மாற்றத்தை நோக்கி செல்வது. அப்படித்தான் நாங்கள் ஒரு கிராமத்தில் தங்கி அந்த கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தை வந்து சேர்ந்தோம். இதற்கு முன்பு பெருந்தலையூர், அம்மாபாளையம் ஆகிய கிராமங்களில் தங்கி பணியாற்றிய அனுபவத்துடன் இப்போது நாங்கள் எங்கள் பணிகளை செய்ய தேர்ந்தெடுத்து உள்ள கிராமம் கோபிக்கு அருகே உள்ள வெள்ளாளபாளையம். இது சுமார் 10 ஊர்களையும் 10,000 மக்களையும் உள்ளடக்கிய ஒரு பெரிய ஊராட்சி. நாங்கள் அதில் பாரியூர் வெள்ளாளபாளையம் என்கிற ஒரு ஊரை மட்டும் இப்போது கையில் எடுத்து உள்ளோம்.

இது சுமார் 1300 வீடுகளையும், 3500 பேர் கொண்ட மக்கள் தொகையையும் உள்ளடக்கிய கிராமம். இங்கு லைலா பானு முழு நேரப் பணியாளராகவும், இலக்கியா பகுதி நேரப் பணியாளராகவும் அங்கேயே தங்கி பணியாற்றுகிறார்கள். லைலா 15,000 ரூபாயும், இலக்கியா 7500 ரூபாயும் மாத ஊதியமாக பெறுவார்கள்.

வெள்ளாளபாளையத்தில் இந்த பெண்கள் தங்குவதற்கு ஒரு தனி வீடும், முனையின் பணிகளை மேற்கொள்வதற்கு ஒரு தனி அலுவலகமும் வாடகைக்கு எடுத்து உள்ளோம். இதுவரை வெள்ளாளபாளையாயம் கிராம மக்களிடம் நாங்கள் இங்கு வந்துள்ள நோக்கத்தை வீடு வீடாக சென்று தெரிவித்து உள்ளோம். கிராம சபா கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசியுள்ளோம்.

இந்த ஊர் ஏற்கனவே படித்த செழுமையான மக்கள் அதிகம் உள்ளார்கள். ஊரும் குப்பைகள் அதிகம் இல்லாத சுத்தமான ஊராகவே உள்ளது. ஆகவே நாங்கள் புதிதாக சென்றவுடன் வழக்கமாக மேற்கொள்ளும் தூய்மை பணிகளுக்கு பதிலாக வேறு விதமான பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.

குக்கூ சிவராஜ் அவர்கள் வெள்ளாளபாளையாயம் அலுவலகத்தை 18.10.26 அன்று திறந்து வைத்தார்.

CATEGORIES:

Uncategorized

Tags:

No responses yet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *