முனை அமைப்பின் கருத்தியல்:
நேர்மையான, சுயசிந்தனை மிக்க சமூகமே மேம்பட்ட சமூகம், அதை அடைய முயற்சிப்பதே இந்த அமைப்பின் லட்சியம்.
கொள்கைகள்:
1. காந்தியம் இந்த அமைப்பின் ஆதாரம் என எண்ணுகிறோம்.
2. எதிர்ப்பு செயல்பாட்டின் மேன்மையை உணர்ந்துள்ளோம். ஆனால் சாத்தியமான நீடித்த ஆக்கப்பூர்வ நேர்நிலை செயல்பாட்டில் ஈடுபட எண்ணுகிறோம்.
3. அமைப்பு உறுப்பினர்கள் தனி வாழ்கையில் இக்கொள்கைகள் முக்கியம் எனவும், இந்த அமைப்பை பயன்படுத்தி லாபம் அடையக் கூடாது எனவும் எண்ணுகிறோம்.
4. தான தர்ம காரியங்களை விட சமூக மன மாற்றம் முக்கியம் என எண்ணுகிறோம்.
5. செயல்பாட்டில் சமரசம் இன்றியமையாதது என எண்ணுகிறோம்.
6. அதேசமயம் அளவுக்கு மிஞ்சிய சமரசம் ஒரு வீழ்ச்சி என எண்ணுகிறோம்.
7. சமூக மாற்றத்தை நிகழ்த்த “முனை” உறுப்பினர்கள் போல தன்னார்வலர்களை உருவாக்குதல் எங்கள் முக்கிய கொள்கைகளில் ஒன்று என எண்ணுகிறோம்.
8. நிதி ஒழுக்கம் முக்கியம் எனவும், வரத்து செலவு இரண்டிலுமே உறுப்பினர்களின் கூட்டு ஒப்புதல் தேவை என எண்ணுகிறோம்.

அம்மாபாளையத்தில் முனை அமைப்பின் துவக்க விழா
அறச்சிக்கல் ஏற்படும் போது நாம் பரிசீலிக்க
வேண்டியவை:
1. ஒவ்வொரு செயலிலும் உயர் லட்சியவாதி ஒருவர் செய்யும் லட்சிய
செய்முறை ஒன்றை கருதுதல், அதன் படி நில்லாமையின் பலவீனத்தை ஒப்புக் கொள்ளல், சாத்தியமானதை செய்தல். லட்சியம் நோக்கி முன்னேறுதல்.
2. பிறரிடத்து தன்னை வைத்தல், நன் நம்பிக்கை வைத்தல்.
3. கடந்த காலத்தை, எதிர் காலத்தை அளவோடு பரிசீலித்தல்.
4. தனக்கும் தன் சுற்றதுக்கும் ஊறு நேரினும் செய்தல்.
5. எதிர் தரப்புக்கு நம்மை நேரினும் செய்தல்.
6. ஆதரவு பெற்றோர் உதாசீனம் செய்தாலும் செய்தல்.
7. மன நிறைவோ, நல்விளைவை எதிர் பார்த்தோ, ஆபத்து கருதியோ அல்ல, இது சரி என்பதால் மட்டுமே செய்தல்.
……..


அறக்கல்வியால் உறுப்பினர் அறிந்தவை:
1. மனிதர்கள் நல்லவர்கள், அனைத்து தரப்பு நியாயத்தையும் பரிசீலிக்க வேண்டும்.
2. குற்றம் செய்தவரை அக்குற்றத்தை வைத்து மதிப்பிடல் தவறு, அவர் மனம் திருந்த முடியும்.
3.நேர்மையற்று மகிழ்ச்சியாக இருப்பதை விட நேர்மையாக இருப்பதால் அடையும் மதிப்பு உயர்ந்தது.
4. பெற்றோரை பேணுதல் போலவே சமூகப் பணி இன்றியமையாதது.
5. பொது சமூகத்திற்குத் தெரியாத ஒருஅறிவியக்கம் தொடர்ந்து தீவிரமாக இயங்கிக் கொண்டு இருக்கிறது.
6. அறிவு பெறவும் செயலாற்றவும் உகந்த நண்பர்கள் சுற்றம் தேவை.
7. உடனடியாக ஒருமுறை ஆற்றும் செயலை விட நீடித்த தொடர் செயல்பாடு பெரிது.
8. ஒருவரின் கற்பனையும் தனித் தன்மையும் போற்றத் தக்கது.
அறக்கல்வி ஒரு உறுப்பினரின் ஆளுமை மீது ஏற்படுத்திய மாற்றங்கள்:
1. பொதுவெளியில் துணிவுடன் பேசுதல், தவறுகளை உரிய விதத்தில் தட்டிக் கேட்டல்.
2. ஈடுபாடு இல்லாமல் இருத்தல், தள்ளிப் போடுதல் போன்றவை விலகி புதிய செயல்பாடுகளில் உடனடியாக செயல்படும் திறன் கை கூடி , பொறுப்பேற்றுக் கொள்ளும் பண்பு வளர்தல்.
3. திட்டமிட்டு அதை எழுத்து வடிவமாக மாற்றும் ஆற்றல் கொள்ளுதல்.
4. குழுவாக செயல்படுதல், குழுவினை வழிநடத்துதல் ஆகிய திறன்கள் கைகூடுதல்.
5. பெருஞ்செயல் ஆற்றியவர்களை கண்டதால் நிறைவு இன்மை தோன்றி, தன்னிறைவு கொள்ளும்படி செயலாற்றும் ஊக்கம் பெறுதல்.
6. கலைகள் அறிமுகம் கிடைத்தல். புத்தகங்கள் வாசிக்க, பயணம் செய்ய துவங்குதல், ரசனை மேம்படுதல்.
No responses yet