ஓட்டுக்கு பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களியுங்கள் என்கிற பிரச்சாரத்தை பல்வேறு வழிமுறைகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் செய்து வருகிறோம். கடந்த 2025 ஜனவரியில் இந்த பிரச்சாரத்தை முன்வைத்து கோவை போத்தனூரில் உள்ள காந்தி மண்டபத்தில் தொடங்கி வேதாரண்யத்தில் ராஜாஜி உப்பு சத்தியாக்கிரகம் செய்த இடம் வரை சுமார் 400 கிமீ இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டவாறே நாங்கள் 6 பேர் நடந்து சென்று மக்களிடம் பேசினோம். இந்த நடைபயணத்தில் திண்டுக்கல் காந்தி கிராமம் சென்று அங்கு கிருஷ்ணாமமாள் ஜகந்நாதன் அவர்களுடன் ஒரு நாள் தங்கி இருந்தோம். இது மொத்தம் 18 நாட்கள் கொண்ட பயணம். ஒவ்வொரு நாளில் நடந்தவற்றையும் தனித்தனி பதிவுகளாக எழுதியுள்ளோம்.
சென்ற வருட 400 கிமீ நடைபயணம் : இணைப்பு

இந்த 2026 ஜனவரியிலும் இதே போல் நேர்மையாமையாக வாக்களித்தல் என்பதை வழியுறுத்தி கோபி லக்ஷ்மண ஐயர் விடுதியில் தொடங்கி திருச்செங்கோடு காந்தி ஆஸ்ரமம் வழியாக சென்னை காந்தி மண்டபம் வரை சுமார் 450 கிமீ நடைபயணம் சென்று உள்ளோம். ஜனவரி 11 ஞாயிறு அன்று தொடங்கி ஜனவரி 31 ஆம் தேதி வரை மொத்தம் 21 நாட்கள் இந்த நடைபயணம் மேற்கொண்டு உள்ளோம். இந்த முறையும் அதே ஆறு பேர் மீண்டும் முழுவதுமாக நடந்தோம். ஆனால் ஒரு வாரம் வரை வேறு சில நண்பர்கள் உடன் நடந்தார்கள்.
சென்ற முறை 18 நாட்களும் மக்கள் ஆதரவில் தான் உணவு மற்றும் தங்குமிடத்தை பெற்றோம். எங்கள் நோக்கமே ஹோட்டல்களில் சாப்பிடக் கூடாது, விடுதியில் தங்கக் கூடாது என்பதே. அதன் படி வேறு வழியே இல்லாமல் சுமார் 6 வேளைகள் மட்டுமே நாங்கள் கடையில் சாப்பிட வேண்டிய தேவை இருந்தது. ஒரு இரவு கூட தங்க இடம் இல்லாமல் போகவில்லை. தமிழகமே எங்களுக்கு உதவியது. இந்த முறையும் அதே நம்பிக்கையுடனே சென்றோம். இந்த முறை மொத்தம் 9 மாவட்டங்களை நாங்கள் கடந்து சென்றோம். ஆனால் இந்த முறை இன்னும் கூடுதலான ஆதரவு இருந்தது. நல்லோர் வட்டம் என்னும் அமைப்பு எங்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியது. ஒவ்வொரு ஊரிலும் அந்த அமைப்பின் பொறுப்பாளர்கள் எங்களை சந்தித்து உதவியது மட்டும் அல்லாமல் எங்களுடன் நடக்கவும் செய்தனர். இறுதி நாள் சென்னை காந்தி மண்டபத்தில் நாங்கள் எங்கள் நடைபயணத்தை முடித்தோம். தமிழக தேர்தல் ஆணையர் திருமதி.அர்ச்சனா பட்நாயக் IAS மற்றும் திரு. மேனுவல் ராஜ்
இணை தேர்தல் ஆணையர் ( விழிப்புணர்வு ) அவர்கள் இந்த நடைபயணத்திற்கு பெரும் வரவேற்பு அளித்து, அவர்களின் அறிவுறுத்தலில், திரு. ரகு குமார், துணை ஆட்சியர், (சைதாப்பேட்டை தொகுதி தேர்தல் அதிகாரி) அவர்கள் காந்தி மண்டபத்தில் எங்களை வரவேற்று மரியாதை செய்தார்.

இந்த நடைபயணத்தின் நீட்சியாக நாங்கள் இப்போது பணியாற்றிக் கொண்டு இருக்கும் அம்மாபாளையம் கிராமத்தில் 2024 மக்களவைத் தேர்தலின் போது பெருந்தலையூரில் செய்தது போலவே வருகிற சட்டமன்றத் தேர்தலில் வாக்குக்கு பணம் வாங்காதீர்கள் என்கிற இதே பிரச்சாரத்தை முன்வைத்து ஒன்றரை மாதம் தீவிரமாக பணியாற்ற உள்ளோம். அதே போல தமிழக அளவில் இதை முன்னெடுக்கும் அறப்போர் இயக்கத்துடன் இணைந்தும் பணியாற்ற உள்ளோம்.

சிபி எழுதிய நடைபயணக் கட்டுரைகள்:
- முதல் நாள்
- இரண்டாம் நாள்
- மூன்றாம் நாள்
- நான்காம் நாள்
- ஐந்தாம் நாள்
- ஆறாம் நாள்
- ஏழாம் நாள்
- எட்டாம் நாள்
- ஒன்பதாம் நாள்
- பத்தாம் நாள் – 1
- பத்தாம் நாள் – 2
லைலா பானு எழுதிய கட்டுரைகள்:
- A walk with solitude – Laila banu
- A walk without anticipation – Laila banu
- ENGAGING THROUGH RESISTANCE. – Laila Banu
- The evidence of conscience – Laila banu

முழுவதும் நடந்தவர்க்கள்:

அனு ஸ்ரீ, இரண்டாம் LLB, SKP சட்டக் கல்லூரி, திருவண்ணாமலை.
அலைபேசி: 90251 65842

அர்ச்சனா, மூன்றாம் ஆண்டு இளங்கலை கணிதம், சிக்கண்ணா கலைக் கல்லூரி.
அலைபேசி: 96007 05171

சிபி, completed BBA on April 2024, Gobi arts and science college.
அலைபேசி: 63835 69741

சௌமியா ஸ்ரீ, இரண்டாம் LLB, அரசு சட்டக் கல்லூரி, கோவை.
அலைபேசி: 99657 04414

லைலா பானு, மூன்றாம் ஆண்டு இளங்கலை பொருளியல், கோபி கலைக் கல்லூரி.
அலைபேசி: 98944 64092

கௌதம், completed Bsc. Maths on April 2024, Gobi arts and science college.
அலைபேசி: 63748 79199


7 Responses
அன்புசார் இளைய சமுதாயத்தினரே.,.,
உங்களை பார்க்கும் போது இளையோர்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கிறது. உங்களோடு சேர்ந்து நடபதற்க்கான அனைத்து முயற்சிகளையும் நமது நல்லோர்வட்ட குழுவினரும் செய்து வருகின்றனர். சிறப்பான சமுதாயம் நாம் அனைவரும் இணைந்து செயல்படைவோம். Great work team.
அருமை உங்கள் லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள் துணை நிற்கிறோம்
இளைஞர்கள்.. இந்த காலகட்டத்தில் இது போன்ற ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுவது மிகுந்த நம்பிக்கையளிக்கிறது.
I may join at Mudichur or Guindy Gandhi Mandapam.
இது ஒரு அரசியல் கட்சிகள் நடத்தும் நடைபயணம் அல்ல. இது ஆன்மாவின் கூப்பாடு. சிதிலமடைந்த மக்களாட்சியை ச் சீர்படுத்த நிகழ்த்தும் ஒரு தவம். ஒரு நாள் இது வரலாறாகும். நான்கு கோடி மாணவர்கள் இந்தியாவின் உயர் கல்விச் சாலைகளில் கல்வி பயின்று வருகின்றனர். இந்த ஆறு மாணவர்களுக்கு எப்படி இந்த உணர்வு வந்தது? இவர்களைத் தான் வீரத் துறவி விவேகானந்தர் தேடி இருக்கிறார். அவர் தேடிய இளைஞர்களின் தன்மைகள் இவர்களிடம் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இவர்கள்தான் நமக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள். எங்கோ ஒரு இடத்தில் இவர்கள் வெப்பத்தை உருவாக்குகிறார்கள். அது பரவும் நாள் வெகு தொலைவில் இல்லை. பேராசிரியர் க. பழனித்துரை காந்திகிராமம்.
VAZHGA VALAMUDAN VANAKKAM BY PADMANAPAN BACKIALAKSHMI SALEM
Brilliant initiative…keep it going and growing. This has to reach the hearts of every citizen across our state and country. A mass movement will help transform the hearts of the people and our society as a whole.