15. நிகழ்வுகள்

26.10.24

அமைப்பின் கொள்கைகள், உறுப்பினர் சேர்க்கை மற்றும் நீக்க விதிகள், தேர்தல் முறை. நிதி ஏற்பு கொள்கைகள் ஆகியவற்றை பற்றி பேசி முடிவெடுத்த்தோம்

அம்மாபாளையத்தில் அறிமுகம்

முனை இல்லம், அம்மாபாளையம்

முனை பெயற்பலகை திறப்பு:

12.12.24
ஒருநாள் நேர்மை குறித்த பதில்களை வாசிக்கும் கூட்டம்:

23.02.25 அன்று அம்மாபாளையத்தில் Not one less திரைப்படம் திரையிடல்

02.03.25 – அம்மாபாளையத்தில் நூலக தூய்மையாக்கப் பணிகள் துவக்கம்

30.03.25 – நகரப் பேருந்துகளில் மாறி மாறி சிறு கிராமங்களில் ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்னும் பிரச்சாரத்தை செய்தவாறு மதுரை வரை சென்று திரும்பினோம்

21.11.25- மாணவி ஸ்ரீவித்யா வாக்குக்கு பணம் வாங்காதீர்கள் என்கிற கொள்கையை முன்வைத்து ஒருநாள் நடைபயணமாக அந்தியூர் முதல் செக்கானூர் வரை சுமார் 35 கிமீ நடந்து பிரச்சாரம் செய்துள்ளார்.

20.11.25 – 25.11.25 – திருவண்ணாமலையில் உள்ள குக்கூ காட்டுப்பள்ளிக்கு சென்று திரு. சிவராஜ் மேற்பார்வையில் வனத்திற்குள் மரம் நடுதல், பள்ளி மாணவர்களுக்கு திண்ணை பள்ளி வகுப்பெடுத்தல் போன்ற சில பணிகளை மேற்கொண்டு உள்ளனர்.

09.12.25 – ஊழல் எதிர்ப்பு உரை

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக, நீதிபதி சந்தோஷ் திருப்பூர் நீதிமன்றத்தில் ஒருங்கிணைத்த சட்ட விழிப்புணர்வு முகாமில் முனை அமைப்பை சேர்ந்த ராகவி என்னும் மாணவி அங்குள்ள நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் முன்னிலையில் ஊழல் எதிர்ப்பு குறித்து உரையாற்றினார்.

11.12.25 – 14.12.25 – திருவண்ணாமலையில் உள்ள குக்கூ காட்டுப்பள்ளிக்கு சென்று திரு. சிவராஜ் மேற்பார்வையில் வனத்திற்குள் மரம் நடுதல், பள்ளி மாணவர்களுக்கு திண்ணை பள்ளி வகுப்பெடுத்தல் போன்ற சில பணிகளை மேற்கொண்டு உள்ளனர்.

11.01.2026 – 31.01.2026 – கோபி லக்ஷ்மண ஐயர் விடுதியில் தொடங்கி சென்னை காந்தி மண்டபம் வரை சுமார் 450 கிமீ ஓட்டுக்கு பணம் பெறாதீர்கள் என்கிற பிரச்சாரத்தை முன்வைத்து நடைபயணம்.

17.01.2026 – அம்மாபாளையத்தில் மரக்கன்று நடும் பணி

கொச்சி பிஎன்னாலே கலைத் திருவிழா  – 20.02.26 – 22.02.26

கேரள மாநிலம் கொச்சியில் கடந்த டிசெம்பர் 2025 தொடங்கி மார்ச் 2026 வரை மூன்று மாதத்திற்கு ஒரு சர்வதேச கலைத் திருவிழா நடந்து வருகிறது. இதில் பல்வேறு நாட்டை சேர்ந்த கலைஞர்கள் தங்கள் கலைப் பொருட்களை காட்சிப் படுத்தி உள்ளனர். கொச்சியை சுற்றி சுமார் 22 இடங்களில் இந்த கலைப் பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டு உள்ளது. அறக்கல்வி மாணவர்கள் மற்றும் முனை அமைப்பை சேர்ந்த 21 பேர் இந்த கலைத் திருவிழாவிற்கு சென்று மூன்று நாட்கள் அங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கலைப் பொருட்களை பார்த்து வந்தோம். இந்த கலைகளை பார்ப்பது, அதன் வழியாக தங்கள் கலை மனதை அடையாளம் காண்பது உறுப்பினர்களை மேலும் தீவிரமாக செயலாற்றத் தூண்டும் என்று எதிரபார்க்கிறோம்.

Nari Ward’s “Divine Smiles”

Tribal health initiative sittilingi: 25.06.26 – 27.06.26

சேலம் – திருவண்ணாமலை செல்லும் ஒரு பாதையில் சிட்டிலின்கி என்னும் பழங்குடி கிராமத்தில் அமைந்துள்ள இந்த அமைப்பிற்கு சென்று இருந்தோம். ஏற்கனவே அந்த அமைப்பை தொடங்கிய ரெஜி, லலிதா ஆகிய மருத்துவர்களை சந்தித்து உள்ளோம். இந்த முறை அவர்கள் செயல்பாடுகள் குறித்து மேலும் அறிந்து கொள்ள சென்றிருந்தோம். SOFA, Porgai, THI மருத்துவமனை, துளிர் பள்ளி ஆகிய இடங்களுக்கு சென்று அவர்களுடன் உரையாடி வந்தோம்.

Anu from Thulir school

With Dr. Regi

CATEGORIES:

Uncategorized

Tags:

No responses yet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *