இந்த அமைப்பு ஒரு லாப நோக்கமற்ற அமைப்பாக இருந்தாலும் நாங்கள் செய்யும் பணிகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை ஊதியமாக பெற்றுக் கொள்கிறோம். பெரும்பாலும் இதில் பணியாற்றுபவர்கள் அனைவருமே கல்லூரி மாணவர்கள் என்பதால் இது போன்ற பணிகளுக்கு செல்வதற்கு வீட்டில் இருந்து எதிர்ப்பு வராமல் இருப்பதற்கு தொடக்கத்தில் இந்த தொகை தேவையானதாக இருக்கிறது. முதலில் பெருந்தலையூர் கிராமத்தில் நாங்கள் பணியாற்றும் போது யான் என்கிற அமைப்பின் நிதி நல்கையில் பணியாற்றி வந்தோம். அப்போதே நாங்கள் அனைவரும் எங்கள் பணிக்கான ஊதியத்தை பெற்று வந்துள்ளோம். ஒரு நாளைக்கு அதிகபட்சம் 400 ரூபாய் வரை ஒருவர் பெற இயலும்.
2024 இறுதியில் நாங்கள் முனை என்கிற அமைப்பை தொடங்கியதில் இருந்து எங்களுக்கு GBR frieght என்கிற ஹைதிராபாத்தை சேர்ந்த நிறுவனமும், சில தனிநபர்களும் நிதியுதவி செய்து வருகிறார்கள். உறுப்பினர்களின் ஊதியமும் அதில் இருந்தே அளிக்கப்படுகிறது. முனை அமைப்பு தொடங்கிய தினத்தில் இருந்து சிலர் ஊதியம் பெறாமலும் பணியாற்றி வருகிறார்கள். சிலர் செய்யும் பணியை விட குறைவான ஊதியத்தை பெற்று பணியாற்றுகிறார்கள். இந்த பணம் பெறாமலே வீட்டை சமாளிக்க முடியும் என்கிற நிலை வரும் போது பணம் வாங்குவதை நிறுத்திக் கொள்கிறார்கள்.
ஊதிய அளவு:
1 மணி நேரம்: 100 ரூபாய்
2 மணி நேரம்: 200 ரூபாய்
3 மணி நேரம்: 300 ரூபாய்
4 மணி நேரத்திக்கு மேல்: 400 ரூபாய்
இன்றைய தேதியில் மொத்தம் 21 உறுப்பினர்களில் 10 பேர் எந்த ஊதியமும் வாங்காமல் பணியாற்ற உள்ளனர். சிலர் குறைவான ஊதியம் பெற உள்ளனர்.
மேலும், லைலா பானு முனை அமைப்பில் முழு நேர பணியாளராக சேர உள்ளதால் அவர் மாத ஊதியமாக 15,000 ரூபாய் பெற உள்ளார். இலக்கியா பகுதி நேர ஊழியராக பணியாற்ற உள்ளதால் மாத ஊதியமாக 7500 ரூபாய் பெற உள்ளார்.
04.06.2026
No responses yet